நவம்பர் 3-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்..! தமிழக அரசு புதிய கோரிக்கை..!

நவம்பர்  3-ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்..!  தமிழக அரசு புதிய கோரிக்கை..!

காவிரி மேலாண்மை ஆணையக்  கூட்டம் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறப்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று கூடி கர்நாடகத்தின் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 2600 கன அடி நீர் தண்ணீர் திறப்பதற்கான பரிந்துரையை வழங்கியது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் நவம்பர் மூன்றாம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ் கே ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 13 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைபடி காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்திவருகிறது.

இவ்வாறிருக்க, வடகிழக்கு பருவ மழை எப்போதும் இல்லாதவாறு இந்த ஆண்டு குறைவாக இருந்த காரணத்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டமானது அதன் தலைவர்   வினித் குப்தா தலைமையில் நேற்று காணொலி வழியாக நடைபெற்றது. 

தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநில உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு, மற்றும் நீர் வரத்தை கணக்கிட்டு நவம்பர் மாதத்தில் தமிழ்நாட்டிற்கு  வினாடிக்கு 13,000 கன அடி வழங்க அறிவுறுத்த வேண்டும் என தமிழ்நாடு தரப்பில் கோரப்பட்டது.  

இதனையடுத்து,  கர்நாடக அரசு தரப்பில், நீர்வரத்து இல்லாததால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என கூறப்பட்டது. 

இந்நிலையில், நவம்பர் 1 முதல் 23-ம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீர் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது. 

இதையும் படிக்க   | சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்...மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!