தமிழ்நாட்டிற்கு 3,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு..!

தமிழ்நாட்டிற்கு 3,000 கனஅடி நீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு..!

காவிரியில் தமிழ்நாட்டுக்கு மூவாயிரம் கனஅடி நீர் திறக்க, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும், ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில், வருகிற 31-ம் தேதி வரை நாளொன்றுக்கு மூவாயிரம் கனஅடி நீர் வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மேலும், கூட்டத்தில், காவிரியில் 16 ஆயிரம் கனஅடி நீரை திறக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்களை தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்ற மேலாண்மை ஆணையம், அடுத்த 15 நாட்களுக்கு மூவாயிரம் கனஅடி நீர் வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகம், இந்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

இதையும்  படிக்க   | ஆவின் பணியாளர்களின் அகவிலைப்படி சமன் செய்து உத்தரவு..!