சாதிவாரி கணக்கெடுப்பு; "திமுக இரட்டை வேடம்"  அண்ணாமலை விமர்சனம்!

சாதிவாரி கணக்கெடுப்பு; "திமுக இரட்டை வேடம்"  அண்ணாமலை விமர்சனம்!

சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசு எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்ததற்கு, இது திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

கட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விவாகதிக்கப்பட்ட பொழுது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை எனக் குற்றம் சாட்டிய அவர் பிற்படுபத்தப்பட்டோருக்கான உரிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார். 

இதனையடுத்து பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனற விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில்  2021 ஆம் ஆண்டு நடத்தப்படாத மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பாரத பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

இந்நிலையில் இதனை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை, இரட்டை வேடத்திற்கு உறைவிடமாக தி.மு.க. வினர் உள்ளதாக கூறியுள்ளார். திமுகவினருக்கு சிலவற்றை நினைவூட்ட வேண்டும் என தெரிவித்துள்ள அவர், 2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குலசேகரன் கமிஷனுக்கு 6 மாதங்கள் அனுமதி நீட்டிக்க மறுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கமிஷன் பாதியில் நிற்கும் நிலையில் திமுகவை 6 மாத கால நீட்டிப்பு வழங்காமல் தடுத்தது எது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

UPA அரசாங்கத்தில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக, அதன் ஆட்சிக்காலம் முடியும் வரை, 2011-ன் சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பை வெளியிட எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ள அவர், மத்திய அரசிடம் அற்பமான கோரிக்கைகளை வைக்கும் முன், தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை திமுகவுக்கு உள்ளது எனவும் கூறியுள்ளார். 

இதையும் படிக்க:'உபா' சட்டத்தில் கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ நிர்வாகிகளுக்கு ஜாமீன்!