தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான வழக்கு.. விளம்பரத்துக்கான வழக்கு - மத்திய அரசு

விளம்பரம் தேடுவதற்காக மட்டுமே தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை சட்டப்பூர்வமாக்கும் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோருவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான வழக்கு.. விளம்பரத்துக்கான வழக்கு - மத்திய அரசு

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் தொடர்பான வழக்கின் நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான மனு மீது கடந்த ஆண்டு மத்திய அரசிடம் உயர்நீதிமன்றம் பதில் கேட்டது.

இந்நிலையில் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்  இல்லை எனவும் இதனால் யாரும் அதிகமாக பாதிக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு பதிலளித்துள்ளது. அனுதாபம் மற்றும் விளம்பரத்துக்காக மட்டுமே இவ்வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியத் திருமணங்கள் என்பது கலாசாரம் மற்றும் பழமையான பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவற்றை மட்டுமே பொறுத்தது எனவும் எதிர்பாலினத்தவரின் திருமணத்தை மட்டும் ஆதரிப்பதில் சட்டப்பூர்வமான நலன் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.