சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..! ராணிப்பேட்டை அருகே பரபரப்பு...!

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!  ராணிப்பேட்டை அருகே பரபரப்பு...!

ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
என்ஜின் இணைப்பின் போது சரக்கு ரயில் தடம் புரண்டது.  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ளது மகேந்திரவாடி ரயில் நிலையம். இங்கு இரவு சென்னை மார்க்கத்தில் இருந்து காட்பாடி மார்க்கமாக செல்லும் சரக்கு ரயில் ஒன்று வந்தது. அப்போது  இந்த சரக்கு ரயில் இரவு மகேந்திரவாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, ரயில் என்ஜின் இணைப்பு துண்டிக்கப்பட்டு என்ஜின் மட்டும் எடுத்து செல்லப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை சரக்கு ரயில் எடுத்து செல்ல என்ஜின் வரவழைக்கப்பட்டு சரக்கு ரயிலுடன்  இணைக்கும் பணி நடந்தது. அப்போது கடைசி பெட்டியின்  2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. 

இதனையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும்  மெஷின் வரவழைக்க, ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மெஷின் வர தாமதம் ஏற்பட்டுள்ளதால் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை.லூப் லைனில்  சக்கரங்கள் தடம் புரண்டதால் பிரதான தடத்தில் ரயில்கள் செல்ல பாதிப்பு எதுவும் இருக்காது என கூறப்படுகிறது.

இதையும் படிக்க   } இரண்டாண்டு திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் எதுவும் விடவில்லை - குற்றம் சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

என்ஜின் இணைப்பின்போது தண்டவாளத்தில் இருந்து சக்கரங்கள் தடம் புரண்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க   } உலக அமைதி வேண்டியும், நாட்டுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டியும்....இஸ்லாமியர்கள் தொழுகை