கொட்டும் மழையிலும் தீமிதியா?

கொட்டும் அடை மழையிலும், அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை, காத்திருந்து ஏராளமான பக்தர்கள் நின்று தரிசித்தனர்.

கொட்டும் மழையிலும் தீமிதியா?

மழை வெயில் என பக்திக்கு இல்லை, கடவுளுக்கும் இல்லை என படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையிலும், தவம் போல, கன மழைக்கு இடையில், தீமிதி திருவிழா நடைபெற்றதோடு, அதனை ஏராளமான பக்தர்கள் காத்து தரிசித்த சம்பவம், தாம்பரத்தில் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த  நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட மப்பேடு புத்தூரில் அமைந்துள்ள  அருள்மிகு ஓம் ஶ்ரீ ஆதிசக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின்  தீமிதி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.

சுமார் 8 மணியளவில் அம்மன் வீதி விழா தொடங்கியதும் மழை வெளுத்து வாங்கிய நிலையிலும், மப்பேடு புத்தூர் பெருமாள்புரம் ஏரியில் கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

 கொட்டும் மழையிலும்  தீமதி திருவிழாவை பார்ப்பதற்கு அந்த பகுதியில் உள்ள சிறியவர்கள் பெண்கள் பெரியோர்கள் என ஏராளமானவர்கள் ஒன்று கூடி காத்திருந்தனர் . கன மழை வெளுத்து வாங்கிய போதிலும் பக்தர்கள் கலையாமல் காத்திருந்து தீமிதி திருவிழாவை கண்டு களித்தனர்.இந்த தீமிதி விழாவில் 108 நபர்கள் தீக்குண்டத்தில் நடந்து சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.

கனமழையாக இருந்தாலும் பரவாயில்லை, எங்களுக்கு நேர்த்திக்கடன் தான் முக்கியம் என்று தீமிதித்த பக்தர்களை விட, அதனை பார்க்கக் காத்திருந்த பக்தர்கள் தான் தற்போது பேசுபொருளாகியுள்ளனர்.