இனி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்தில் கேமரா... ஓட்டுனர், நடத்துநர் பின்பற்ற வேண்டிய நெறிமுறை வெளியீடு!

மாநகர பேருந்துகளில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

இனி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்தில் கேமரா... ஓட்டுனர், நடத்துநர் பின்பற்ற வேண்டிய நெறிமுறை வெளியீடு!

போக்குவரத்துத் துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கென  ‘நிர்பயா பாதுகாப்பு நகரத் திட்டத்தின்’ கீழ், 2500 மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சி.சி.டி. வி. கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக  500 பேருந்துகளில் தலா 3  சி.சி.டி. வி. கேமராக்கள் மற்றும் 4 அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு,  அதன் முன்னோட்ட செயல்பாடும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.  மேலும் இந்த முழு அமைப்பும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை வழியாக கண்காணிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது. 

இதனால் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் அசவுகரியம் ஏற்பட்டாலோ,   பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும்.

இந்தநிலையில் பேருந்து நடத்துனர் பேருந்தில் உள்ள பொத்தானை அழுத்தும்  ஒலி ஏற்படும் போது அங்குள்ள நிலைமையை கண்காணித்து, அதற்குத் தக்கவாறு காவல்துறை நடவடிக்கை மற்றும் மருத்துவ உத வி தேவைப்படும் பட்சத்தில் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரை தெரி விக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

புகார் தெரி விக்கப்பட்டவுடன் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கையை எடுப்பார்கள் எனவும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.