உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் இன்று!

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் இன்று!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மாநகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 510 இடங்களுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலியாகவுள்ள 15 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூரில் பள்ளிப்பட்டு ஊராட்சி, மாம்பாக்கம், பூந்தமல்லி, மீஞ்சூர், மெதூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 8 பேர் களத்தில் உள்ளனர்.

காஞ்சியில் ஒரு மாநகராட்சி கவுன்சிலர், 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர்.

செங்கல்பட்டில், காட்டாங்கொளத்தூர், மதுராந்தகம், பொன்பதிர்கூடம் உள்ளிட்ட 40 இடங்களில் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெறும் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

தொடர்ந்து வரும் 12ம் தேதி காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.