மறைந்தார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்..!!

மறைந்தார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்..!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் புகழ்பெற்ற அறிவுரையாளராக விளங்கியவர் நித்தியானந்தம் சுவாமிகள். எளிய தமிழில் இவர் பேசும் வசனங்களும் வழங்கும் அறிவுரைகளும் அனைவரையும் அப்போது வெகுவாக ஈர்த்தன. இந்நிலையில் இன்று மாலை நித்தியானந்தம் சுவாமிகள்

சென்னையில் பெருமாள் – ஜெயலட்சுமி  தம்பதியினருக்கு 1953 ஆம் ஆண்டு 29 ஆம் நாள் ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். நித்தியானந்தம் என்பது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயராகும். இவரது தாய் தந்தையர் இவரது ஐந்தாவது வயதில் கருத்து வேறுபாட்டினால் தனித்தனியே பிரிந்து சென்ற பொழுது இவரது சகோதரர்களைத் தாயார் தன்னுடன் அழைத்துச் செல்ல, தந்தையார் திருவள்ளூர் மாவட்டத்திலே உள்ள நல்லாத்தூர் என்ற கிராமத்திலுள்ள தனது சகோதரியின் இல்லத்திற்கு இவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். 

தான் இப்பிறவியில் சிறுவயதில் அனுபவித்த துன்பங்களுக்குக் காரணம் தேடி யோகப்பயிற்சியின் மூலம் பெற்ற ஞானத்தை, பிறருக்கும் புகட்டி அவர்களும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆச்சிரமத்தில் இருந்து கற்றுக்கொடுத்து வருகிறார். உண்மையான குருவைத் தேடி அலைபவர்களுக்கு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள் ஒரு சிறந்த வழிகாட்டி என்பது பலரது கருத்தாகும். அவரது சீடர்கள் இவரை ஒரு சித்தராகவே மனதில் நிலைநிறுத்தி யிருக்கிறார்கள்,போற்றுகிறார்கள்.

இந்நிலையில் இன்று இவர் இறைவனடி சேர்ந்தார். வயது மூப்பின் காரணமாக இவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.