சாலையின் மையப்பகுதியில் அமைந்த ஆழ்துளை கிணறு...! விபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம்...!

விபத்து ஏற்படும் வகையில் நடுரோட்டில் உள்ள பாழடைந்த ஆழ்துளை கிணறு.

சாலையின் மையப்பகுதியில் அமைந்த ஆழ்துளை கிணறு...! விபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம்...!

திருப்பத்தூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 35 வது வார்டு கலைஞர் நகர் பகுதியில், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கலைஞர் நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடுரோட்டில் சுமார் 5 வருடங்களாக பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு ஒன்று நடுரோட்டில் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த தெருவில் புதியதாக பிளவர் பிளாக் அமைத்து நகராட்சியின் சார்பாக சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் பழுதடைந்த அந்த ஆழ்துளை கிணற்றை அகற்றாமலேயே சாலை போடப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட  வாகனங்களில் வரும் பயணிகள் விபத்தில் சிக்க கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அதுமட்டுமல்லாமல், இரவு நேரங்களில் அந்த பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் இரவில் வருகிற வாகனங்கள் விபத்தில் சிக்கினால் ஆழ்துளை கிணற்றின் இரும்பு விளிம்பின் மீது விழுந்து உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று பொறுப்பில்லாமல் செயல்பட்டு வரும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக அந்த ஆழ்துளை கிணற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.