அகில இந்திய யாத்திரைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்...!

ராமேஸ்வரத்தில் பொதுசுகாதாரம், நோய் தடுப்புத்துறை மற்றும் அகில இந்திய யாத்திரைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்.

அகில இந்திய யாத்திரைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம்...!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மற்றும் அகில இந்திய யாத்திரைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் இரத்த தான முகாம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், நகர்ப்புற ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவர் ஜி.ஜான் ஆரோன் தலைமை வகித்தார். அகில இந்திய யாத்திரைப்பணியாளர்கள் சங்க தலைவர் அ.பாஸ்கரன் முதலில் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் உறுப்பினர்கள் 60 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். 

இந்த நிழக்ச்சியில், சுகாதாரத்துறை ஆய்வாளர் ச.தியாகராஜன், யாத்திரை பணியாளர்கள் சங்க செயலாளர் என்.மலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் பத்மநாதன், கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த முகாமில் பெறப்பட்ட ரத்தம், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயர் காக்கும் வகையில் நோயாளிகளுக்கு பயன்படுத்த உள்ளதாக ரத்த வங்கி ஊழியர் தெரிவித்தார்.