அரசு துறையில் உள்ள காலி இடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வலியுறுத்தி முற்றுகை

அரசு துறையில் உள்ள காலி இடங்களை  பதவி உயர்வின் மூலம் நிரப்ப வலியுறுத்தி முற்றுகை

புதுச்சேரியில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப வலியுறுத்தி தலைமை செயலரின் காரை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட  அரசு ஊழியர்கள் தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள எழுத்தர் மற்றும் இளநிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அரசு நாடுமுழுவதிற்கும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதற்கு புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் இளநிலை எழுத்தர், அரசு உதவியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பதவி உயர்வு மூலம் மட்டுமே காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும், புதிதாக தேர்வு செய்பவர்கள் புதுச்சேரி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டுன் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. புதுச்சேரி தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பிறதுறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலக வாசலில் தலைமைச்செயலாளர் காரின் முன்பு அமர்ந்து தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உணவு இடைவேலைக்கு தலைமை
தலைமை செயலளர் செல்ல முடியாமல் போனது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஊழியர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதன்பின்பு தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா தனது காரில் புறப்பட்டு சென்றார். அரசு ஊழியர்கள் போராட்டத்தால் தலைமை செயலகம் ஒரு மணி நேரம் பரபரப்படைந்து.