கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்: தமிழக கோழிப்பண்ணைகளில் நடவடிக்கை தீவிரம்...

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல்லில் உள்ள பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்: தமிழக கோழிப்பண்ணைகளில் நடவடிக்கை தீவிரம்...

கேரளா மாநிலம், ஆழப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியில் உள்ள பண்ணையில் உள்ள கோழி மற்றும் வாத்துகளுக்கு பறவைகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடந்து,  தமிழக கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

கோழிப் பண்ணைகள் உள்பட பண்ணைகளுக்கு உள்ளே வரும் வாகனங்களுக்கும் வெளியே செல்லும் வாகனங்களுக்கும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பறவை காய்ச்சல் எதிரொலியை தொடர்ந்து, முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனை சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.