கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு... கொந்தகை தளத்தில் குத்து வாள், முதுமக்கள் தாழிகள்...

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் கொந்தகை தளத்தில் குத்து வாள் மற்றும் ஒரு அடி உயரமுள்ள மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

கீழடி ஏழாம் கட்ட அகழாய்வு... கொந்தகை தளத்தில் குத்து வாள், முதுமக்கள் தாழிகள்...

கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடியில் ஏழு குழிகளும், அகரத்தில் எட்டு குழிகளும் கொந்தகையில் நான்கு குழிகளும், மணலூரில் மூன்று குழிகளும் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை உறைகிணறுகள், வெள்ளி நாணயம், பவழம், உழவு கருவி, பானைகள், பானைஓடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகை தளத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன.  இதில் 11 தாழிகள் திறக்கப்பட்டு அதில் உள்ள மண்டை ஓடு, எலும்புகள், சுடுமண் கிண்ணங்கள் உள்ளிட்டவைகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.