நேற்று மரம் சாய்ந்து வங்கி மேலாளர் உயிரிழப்பு.. மேலும் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த புங்கமரம் சாய்ந்தது!!

சென்னை கேகே நகர் பகுதியில் மரம் சாய்ந்து ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேலும் ஒரு மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் அச்சம் அதிகரித்துள்ளது.

நேற்று மரம் சாய்ந்து வங்கி மேலாளர் உயிரிழப்பு.. மேலும் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த புங்கமரம் சாய்ந்தது!!

மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக சாலையோரங்களில் பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியால் நேற்று மாலை ஒரு மரம் சாய்ந்ததில் காரில் சென்ற வங்கி மேலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பொன்னம்பலம் சாலையில் 40 ஆண்டுகள் பழமைவாய்ந்த புங்கமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததுள்ளது. இதைத்தொடர்ந்து மரம் விழுந்த இடங்களில் வேறு மரக்கன்றுகளை நட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அச்சத்துடன் அப்பகுதியில் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், பலவீனமாக உள்ள மரங்களை கண்டறிந்து அதனை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அப்பகுதி கவுன்சிலர் தனசேகர் உறுதியளித்துள்ளார்.