ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கொண்டாட்டத்திற்கு தடை... புத்தாண்டில் உற்சாகமின்றி காணப்பட்ட சென்னை... 

காவல்துறையின் தடை உத்தரவால், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமின்றி காணப்பட்டது.

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த கொண்டாட்டத்திற்கு தடை... புத்தாண்டில் உற்சாகமின்றி காணப்பட்ட சென்னை... 

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை மாநகரில் ரிசார்ட்கள், கிளப்புகள், கேளிக்கை விடுதிகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பண்ணை வீடுகள், இசை நிகழ்ச்சி போன்ற இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல் துறை தடை விதித்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு சென்னையில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது. கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக மெரினா கடற்கரை, எலியட்ஸ், பெசன்ட் நகர் கடற்கரைகளில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. பைக் ரேஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர். முக்கிய மேம்பாலங்கள், சாலைகளில் போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.