"பா.ஜ.க. என்றுமே தொழிலாளர் நலம் காக்க, உங்கள் துணை நிற்கும்"....! - அண்ணாமலை

"பா.ஜ.க. என்றுமே தொழிலாளர் நலம் காக்க, உங்கள் துணை நிற்கும்"....! - அண்ணாமலை

உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, அனைவருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை வாழ்த்துக்களை தொிவித்துள்ளாா். மேலும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில்  5 இடங்களில் புதிய ESIC மருந்தகங்கள் மத்திய அரசால் திறக்கப்படுகின்றன எனவும்குறிப்பிட்டுள்ளாா். 

அந்த வாழ்த்துக் குறிப்பில் அவர், "உலகம் தொடங்கிய காலம் தொட்டு, உழைப்பினால் உருவாகும் வியர்வைத் துளிகளை எல்லாம் தொழில் வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும், தொழிலாளர் தோழர்களே!.. உங்கள் அனைவருக்கும் தொழிலாளர் திருநாளான மே தின நல்வாழ்த்துக்கள். நம் பரந்த பாரத தேசத்தின், அபரிமிதமான மனித சக்தி தான், நம்முடைய தொழில் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் துணை நிற்கிறது என்று உணர்ந்தவராக, நம் பாரதப் பிரதமர் திரு.மோடி அவர்கள், தொழிலாளர் நலனுக்காக பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளார்", எனக்கு குறிப்பிட்டார். 

மேலும், அவர், தொழிலாளர் நலனுக்காக தமிழகத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஏற்கனவே 237 ESIC மருந்தகங்கள் இயங்கி வருவதாகவும், நாளை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விழுப்புரம், விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி, மாமல்லபுரம், திருவண்ணாமலை ஆகிய ஐந்து இடங்களில் புதிய ESIC மருந்தகங்கள் மத்திய அரசால் திறக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து, மத்திய அரசின் ESIC சார்பில் தமிழகத்தில் 8 முழுமையான மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இது தவிர கோவை மற்றும் சென்னை கேகே நகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இயங்கி வருகிறது என்றும்,  தமிழகத்தில் இன்னும் எட்டு இடங்களில் ESIC மருத்துவமனைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர், ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடியில் ESIC மருத்துவமனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன எனவும்  குறிப்பிட்டார். 

இதையும் படிக்க     ]  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆதரித்து... பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் கருத்து...!

மேலும், நாகர்கோயில், திண்டுக்கல், ஈரோடு, வாணியம்பாடி, செங்கல்பட்டு. ஆகிய இடங்களில் மத்தியஅரசு அனுமதி அளித்தும் மாநில அரசு நிலம் ஒதுக்காததால், இந்த மருத்துவமனைகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன என்றும் கூறினார். 

மேலும், தொழிலாளர்களின் பணி நேரத்தை எல்லாம் 50 சதவீதம் உயர்த்திட ஆளும் திமுக முயற்சி செய்தபோது, அதை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்த பாரதிய ஜனதா கட்சி என்றுமே தொழிலாளர் நலம் காக்க, உங்கள் துணை நிற்கும் எனக் கூறினார். 

இதையும் படிக்க     ]  12 மணி நேர வேலை சட்டமசோதா...! திரும்ப பெற்றதாக முதலமைச்சர் அறிவிப்பு...!!