கழிவறையை சுத்தம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

சென்னையில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  பாஜக மாநில தலைவர் கழிவறையை சுத்தம் செய்தார்.  

கழிவறையை சுத்தம் செய்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...

நம்ம கடற்கரை நம்ம சென்னை என்ற தன்னார்வ குழு 5 கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரைகள் மற்றும் பொதுக் கழிப்பறைகளை பராமரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 199 ல் உள்ள சோழிங்கநல்லூரில் பூத் எண் 614ல் கழிப்பறைகள் சுத்தம் செய்தனர் இந்த குழுவினர். அந்தக் குழுவில் ஒருவராக பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கழிப்பறையை சுத்தம் செய்தார். தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அண்ணாமலை கழிவறையை  எடுத்து சுத்தம் செய்தார்.

 பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பல்வேறு முக்கிய தலைவர்களின் நினைவிடங்கள் அசுத்தமாக கிடப்பதை கண்டு அவரே துடப்பத்தை எடுத்து கூட்டி சுத்தம் செய்து வருகிறார். குறிப்பாக காந்தி மண்டபத்தைச் சுற்றிலும் அவரே சுத்தப்படுத்தி தூய்மைப் படுத்தினார்.