"என் மீது ED Raid நடத்த வேண்டும் என பாஜகவினர் சொல்கின்றனர்" பயாசுதீன் குற்றச்சாட்டு!

"என் மீது ED Raid நடத்த வேண்டும் என பாஜகவினர் சொல்கின்றனர்" பயாசுதீன் குற்றச்சாட்டு!

என் மீது ED Raid நடத்த வேண்டும் என பாஜகவினர் சொல்கின்றனர் என மாணவர் விக்னேஷ்வரனின் நண்பர் பயாசுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான திமுக போராட்டத்தில், அண்மையில் குரோம்பேட்டையில் நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாசுதீன் கலந்துகொண்டு மேடையில் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், எனக்கு 19 வயது தான். நான் மத்திய அரசிற்கும் நீட் தேர்வுக்கு எதிராக பேசியதை பார்க்கும் பாஜகவினர் என் மீது ED Raid நடத்த வேண்டும் என சொல்கின்றனர். உங்களுக்கு (பாஜகவினருக்கு) என் மீது மாற்று கருத்து இருந்தால் என்னுடைய கருத்தியல் உடன் மோதுங்கள். ஆனால் என்னை அச்சுறுத்த நினைக்காதீர்கள் எனக் கூறினார்

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டம் போல நீட் தேர்வுக்கு போராட மாணவர்கள் தயராக உள்ளோம் எனக் கூறிய அவர், மாநில அரசு அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் என தெரிவித்தார்.  

மேலும், பொறியியல், மருத்துவத்திற்கு நுழைவு தேர்வு உள்ளது போல அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருவதற்கு PEE( Political Entrance Exam ) என ஒரு தேர்வு வைக்க வேண்டும் எனக் கோரியுள்ள அவர், அரசு அதிகாரிகள், பணியாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் குழந்தைகள் அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும் எனவும் கோரியுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள் எல்லாம் இங்குள்ள திமுக அதிமுக போன்ற கட்சிகளின் பின்புலத்தில் தான் உள்ளன என தெரிவத்த பயாசுதீன், இது போன்ற கல்லூரிகளிடம் பேசி மருத்துவ கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிக்க:ஆட்டோ ஏறுவதில் தகராறு ;பயணியின் சுண்டு விரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுநர்!