பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாஜக மாநில மையக்குழு கூட்டம்!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் சென்னை தியாகராயநகாில் உள்ள கமலாலயத்தில் இன்று நடைபெறவுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலுக்காக மத்தியில் ஆளும் பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தோ்தல் குறித்த பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றினைந்து INDIA கூட்டணியை உருவாக்கி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனா்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக சமீபத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இதனையடுத்து  பாஜக தலைமை தமிழ்நாட்டில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறது.

ஏற்கனவே  மாநில பாஜக தலைவா் அண்ணாமலை இரு கட்டங்காளாக என் மண், என் மக்கள் நடைபயணத்தை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளாா். 3-ம் கட்ட நடைபயணம் வரும் 16-ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தலைமையில் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து  இன்று தியாகராயநகாில் உள்ள கமலாலயத்தில் மாநில மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் மூத்த நிர்வாகி பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெறவுள்ளது. 

இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அண்ணாமலை மற்றும் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொள்கின்றனா்.