5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை.. தமிழகம் முழுவதும் பாஜகவினர் வெற்றி கொண்டாட்டம்

உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிப்பதை அடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை..  தமிழகம் முழுவதும் பாஜகவினர் வெற்றி கொண்டாட்டம்

மதுரையில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் திரண்ட ஏராளமான பாஜகவினர், பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு குவிந்த பாஜகவினர், பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இதில், நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 11 கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், காரைக்காலில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர், இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வெற்றியை  கொண்டாடினர்.