"திமுகவின் திட்டங்களை காப்பி அடிக்கிறது பாஜக".....! - அமைச்சா் தாமோ அன்பரசன்.

"திமுகவின் திட்டங்களை காப்பி அடிக்கிறது பாஜக".....! - அமைச்சா் தாமோ அன்பரசன்.

கடந்த 2021 சட்டமன்ற தோ்தலில் திமுக அறிவித்த திட்டங்களை தான் கா்நாடக தோ்தலில் பாஜக காப்பியடித்து அறிவித்துள்ளது என அமைச்சா் தாமோ அன்பரசன் குற்றம்சாட்டினாா். திமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை அடுத்த பல்லாவரத்தில் நடைபெற்றது. 

இதில் அமைச்சர் தா.மோ அன்பரசன்  பங்கேற்று மேடையில் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த 80 சதவீத வாக்குறுதிகளை முதலமைச்சா் நிறைவேற்றி  உள்ளார் என தொிவித்தாா். தொடா்ந்து பேசிய அமைச்சா் திமுக அறிவித்த திட்டங்களை தான் கா்நாடக தோ்தலில் பாஜக காப்பியடித்து அறிவித்துள்ளதாவும் குற்றம்சாட்டினா். 

BJP trying to hinder non-Hindi speakers' education: DMK

தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்த 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி  உள்ளார்  முதலமைச்சர் என்றும், அதோடு,  தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார் எனவும் கூறினார்.

இதையும் படிக்க    }  ஆளுநர் பதவி ஒரு அலங்காரப் பதவி.... அதற்கு அவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டாம்

மேலும், இந்தியாவின் நம்பர் 1 முதல்வராக மு.க. ஸ்டாலின் விளங்கி வருகிறார்.எதிர் கட்சி காரர்கள் திராவிட மாடல்கள் என்று கூறி வருகிறார்கள் ஆனால் 2021 தேர்தல் வாக்குறுதி திமுக அறிவித்த திட்டங்களை தான் தற்பொழுது கர்நாடக தேர்தலில் பாஜக காப்பியடித்து அறிவித்துள்ளது சென்றும் விமர்சித்தார்.

அதையடுத்து, 2024 -ல் முன்னதாக எப்பொழுது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் முழுமையாக காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றியை பெற்று உங்கள் காலடியில் சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிக்க    }  ஆரிய மாயை தோற்றத்தை அகற்ற ..... உருவான இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்...! - ஐ.பெரியசாமி.