பாஜகவின் ஒன்றரையணா வோட்டுக்கும் வேட்டா.....

பாஜகவின் ஒன்றரையணா வோட்டுக்கும் வேட்டா.....

தமிழ்நாடு பெயர் சர்ச்சையை ஆளுநர் ஆர்.என். ரவி முடித்து வைக்க நினைப்பதாகத் தெரியவில்லை. மறுபடியும் தமிழர் நெஞ்சில் நெருப்பு மூட்டவே நினைக்கிறார். 

ஆளுநரது புதிய அறிக்கையில் வெளிவந்துள்ள ”அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்று இருக்கவில்லை” என்பது புதுக் கண்டுபிடிப்பாக இருக்கிறது என முரசோலி குறிப்பிட்டுள்ளது.

தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்பதற்கான விளக்கம் அளிக்க முன்வந்த ஆளுநர், அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை என்று சொல்லி இருப்பது, அதை விட மிகத் தவறான கருத்தாகும்.  இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருப்பதற்குப் பதிலாக அவர் அறிக்கை விடாமலேயே இருந்திருக்கலாம் எனவும் முரசொலியில் எழுதப்பட்டுள்ளது. 

முக்கியமாக, பா.ஜ.க. வுக்கு இருக்கும் ஒன்றரையணா வோட்டுக்கும் வேட்டு வைக்கவே அவர் வந்திருப்பதாகவே தெரிகிறது எனவும் முரசொலி கிண்டலாக பதிவிட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஈரோட்டில் களமிறங்கும் அதிமுக.... விட்டுக் கொடுத்த ஜி. கே. வாசன்!!!!