மீண்டும் ஒத்த ஓட்டு பாஜக - வேட்பாளர் குடும்பத்தினரோ, நண்பர்களோ யாரும் வாக்களிக்கவில்லை போல!!

பவானிசாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன்  ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார்.

மீண்டும் ஒத்த ஓட்டு பாஜக - வேட்பாளர் குடும்பத்தினரோ, நண்பர்களோ யாரும் வாக்களிக்கவில்லை போல!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன்  ஒரு ஓட்டு மட்டுமே பெற்று உள்ளார்.

இந்த பேரூராட்சியின் 11-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 84 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் 35 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் 42 வாக்குகளும் பெற்றனர். ஆனால் இந்த வார்டில் போட்டியிட்ட  பாஜக வேட்பாளர் நரேந்திரன்  1 ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார்.

இந்த வார்டில் மொத்த வாக்கு 162 ஆகும். வேட்பாளர் நரேந்திரனின்  நண்பர்களோ குடும்பத்தினரோ எவரும் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.