வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது!

வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது!

விருதுநகரில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இல்லத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மனு கொடுக்க வந்த பெண்ணை தலையில் அடித்த வருவாய் துறை அமைச்சர்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலவனத்தம் பகுதியில் அரசு நிகழ்ச்சியில் முதியோர் ஓய்வு கேட்டு மனு அளிக்க வந்த பெண்ணை மனுவால் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலையில் தட்டிய வீடியோ வைரல் ஆனது.

பதவி விலக வலியுறுத்திய பாஜக தலைவர் அண்ணாமலை:

அந்த பெண்ணே அமைச்சர் தன்னை அடிக்கவில்லை என விளக்கம அளித்திருந்த நிலையில், ,இந்த விவகாரத்தில் கே.கே.எஸ்.எஸ் .ஆர். ஆர்  பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கெடு விதித்திருந்தார்.

வருவாய்த்துறை அமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜக நிர்வாகிகள்:

இந்த நிலையில் விருதுநகரில் உள்ள வருவாய்த்துறை அமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட பாஜகவினர் திரண்டனர். அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாஜகவினரின் இந்த அராஜகத்தால் நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றி அமைத்திருந்தனர். இதனால்  பள்ளி சென்று விட்டு வீடு திரும்பும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமடைந்தனர்.