தமிழகத்தில் 4 பேருக்கு BA4 தொற்றும், 8 பேருக்கு BA5 தொற்று - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் புதிய வகை  BA4, BA5 என்ற கொரோனா தொற்று 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 4 பேருக்கு BA4 தொற்றும், 8 பேருக்கு BA5 தொற்று - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி சென்னை அயப்பாக்கத்தில் புத்தக கண்காட்சி துவங்கப்பட்டது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர் நாசர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், , புதிய வகை தொற்று தென்பட தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள பரிசோதனை மையத்துக்கு 150 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன் முடிவில் 12 பேருக்கு புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதா கவும் தெரிவித்தார்.

குறிப்பாக, BA4 என்ற புதிய வகை தொற்று 4 பேருக்கும், BA5 தொற்று 8 பேருக்கும் உறுதியாகியுள்ளதாகவும் கூறிய அவர், தொற்று பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.