வெறுப்புப் பேச்சு வழக்கில் இருந்து ஆசம்கான் விடுவிப்பு!

வெறுப்புப் பேச்சு வழக்கில் இருந்து ஆசம்கான் விடுவிப்பு!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடர்பான வெறுப்புப் பேச்சு வழக்கில் இருந்து சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் ஆசம்கான் விடுவிக்கப்பட்டார். 

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக விமர்சித்ததாக, ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம் இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் ஆசம்கானின் எம் எல்ஏ பதவியும் பறிபோனது. இத்தீர்ப்பை எதிர்த்து எம்.பி, எம். எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆசம்கான் மேல்முறையீடு செய்த நிலையில், அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, 2017ம் ஆண்டில் இருந்து மட்டும் ஆசம்கானுக்கு எதிராக 87 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் இது தொடர்பாக இவர் அடிக்கடி கைது செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கள்ளச்சாராயம்: 5 போலீசார் சஸ்பெண்ட்!