தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமை அயோத்திதாசருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து!!!!

தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமை அயோத்திதாசருக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து!!!!

அயோத்திதாசர் 

தமிழகத்தில் தீண்டாமை, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி பிரதிநித்துவம், பெண்ணுரிமை, பகுத்தறிவு போன்ற கருத்துகளை சிந்தித்த மாபெரும் அரசியல் ஞானி அயோத்திதாசர் பண்டிதர் பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூறுவோம். தமிழகத்தில் சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம் உள்ளிட்டவற்றிற்காக போராடிய ஒருவரான அயோத்திதாச பண்டிதர், பத்திரிக்கை கல்வியாளர், சமூக சிந்தனையாளர், மதச் சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், பத்திரிகை ஆசிரியர், மருத்துவர் என இப்படி பன்முகம் கொண்டவர்.

பெருந்தொற்றுக் காலத்தில் அயோத்திதாசர் | ayothidasar - hindutamil.in

சாதிய சித்தாந்தத்திற்கும், ஆரிய வைதீகத்திற்கும் எதிராக வலிமையாக குரல் கொடுத்தவர். சாதி ஒழிப்பிற்காக 1891-ல் ‘திராவிட மகாஜனசபை’யை நிறுவினார். அவருடைய ‘தமிழன்’ இதழ் பகுத்தறிவு, பிராமணிய எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் பிரதிநிதித்துவம், இந்தி எதிர்ப்பு என பல முக்கியமான அரசியலின் அடித்தளமாக விளங்கியது.

மேலும் படிக்க | வெயில் அதிகம : 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - ஆணையர் வேண்டுகோள்

1881-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தலைவர் அயோத்திதாசர், தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் அல்லர், அவர்கள் பூர்வத் தமிழர் என்று பதிய வேண்டும் என்று சொன்னதோடு அல்லாமல் அரசுக்கும் தன் கோரிக்கையை முன்வைத்தார். தமிழர்கள் ஆதி திராவிடர்கள் என்றும், சாதி திராவிடர்களாகப் பிரிந்து இருப்பதை உணர்ந்து ஒட்டுமொத்த மக்களுக்காகவும் சாதிபேதமற்ற திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை 1890-ல் உருவாக்கினார். கிராமம்தோறும் திராவிட மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டர் பதிவு :

திராவிடன், தமிழன் ஆகிய சொற்களை அரசியல் தளத்தில் அடையாளச் சொற்களாகப் பயன்படுத்திய முன்னோடியும் தமிழ்ச் சிந்தனை மரபின் தவிர்க்க முடியாத ஆளுமையுமாகிய பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாள்

மேலும் படிக்க | மலேசியாவில் பிரம்மாண்டமாக தொடங்கியது..! 'மக்கள் செல்வ' னின் அடுத்த படம்

அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பதைவிடச் சாதிப் பெருமையைப் புறக்கணிப்பதுதான் முதன்மையானது என அவர் அன்றே முழங்கியது இன்றும் எண்ணிப் பார்க்கத்தக்கது. பண்டிதரின் கருத்துகளை ஊன்றிப் படிப்போம், அவரது பல்துறைப் பங்களிப்புகளை நமது அரசு அமைத்து வரும் நினைவு மண்டபம் உள்ளிட்ட முயற்சிகளின் வழியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்!

அறிவுத்தளத்திலும் அரசியல் தளத்திலும் மிகப்பெரும் மாற்றுச் சிந்தனை மரபை முன்னெடுத்த அயோத்திதாசரின் புகழ் வாழ்க!