இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் பறிமுதல்..ஒருவர் கைது

ஆந்திராவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா முட்டைகளை தஞ்சை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் பறிமுதல்..ஒருவர் கைது

தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி ரமேஷ் குமார்  உத்தரவின் பேரில் தஞ்சை காவல்துறையினர் தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தல் குறித்து கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நாகப்பட்டினத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற சோதனை மேற்க்கொண்டபோலீசார்,  ஆம்புலன்ஸ் வாகனத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்துவதற்காக எடுத்து செல்லப்பட்டதை கண்டறிந்தனர். மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாகநாகப்பட்டினத்தை சேர்ந்த மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்த போலீசார், கஞ்சா குறித்து விசாரித்து வருகின்றனர்