மணிப்பூர் விவகாரம்: "பாஜக அரசு பதவி விலக வேண்டும்" அருள்மொழி வலியுறுத்தல்!

மணிப்பூர் விவகாரம்: "பாஜக அரசு பதவி விலக வேண்டும்" அருள்மொழி வலியுறுத்தல்!

மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய பாஜக அரசு பதவி விலக வேண்டும் எனவும் முதலமைச்சர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து திராவிடர் கழக மகளிரணி சார்பாக, திராவிட மகளிர் பாசறை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னை, எழும்பூர் பகுதியில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு வெளியே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, திராவிடர் மகளிர் பாசறை மாநில செயலாளர் மணியம்மை, திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி, மணிப்பூரில் பாஜக ஆட்சியமைத்த 8 ஆண்டுகளில் இந்தியா எல்லா வகையாம முன்னேற்றத்திலும் பின் தங்கியுள்ளது. வளர்ந்து வரும் துறைகளில் இந்தியர்களின் வளர்ச்சியும் தடைப்பட்டுள்ளது உலகளவில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பு செயலிழப்பு, பொதுத்துறை தனியார்மயம் என நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதையும் குஜராத் தொழிலதிபர்களுக்கு விற்றுக் கொண்டு இருக்கிறது. மக்களை மதவெறி கொண்டவர்களக மாற்றிக் கொண்டு உள்ளது. பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும். உணவை வைத்து கொலை செய்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் கூட்டு பலியல் வன்முறைக்கு ஆளாகி உள்ளனர். அந்த குற்றத்தை செய்வதர்கள் தண்டனைக் காலத்தை முழுமை செய்யாமல் விடுதலை செய்யப்படுகிறார்கள். பில்கிஸ் பானு வழக்கிலும் குற்றம் செய்தவர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, மணிப்பூரில் ஒன்றிய அரசு பழங்குடியினர் அல்லாத மெய்தி சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க முடிவெடுத்த போது அதனை எடுத்த போது குக்கி இனமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மெய்தி இனமக்களால் குக்கி இன மக்கள் வேட்டையாடப்படுகின்றனர். கிறிஸ்தவ சமயத்தை குக்கி இனமக்கள் பின் தொடர்வதால்தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மனதை பதறவைக்கும்படி 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்து சென்றனர். அதுகுறித்து கவலைப்படவில்லையென்றால் அவர்களது மனம் குற்றம்புரிந்துள்ளது என அர்த்தம். அத்தகைய மனம் படைத்தவர்கள்தான் இந்த விவகாரம் குறித்து பல்வேறு அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறு அவதூறு பரப்பும் நம்மை சுற்றி உள்ளவர்களின் ஆண், பெண்கள் மனதில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய பாஜக மோடி அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய அவர், அதற்கு பயந்துதான் நாடாளுமன்றம் வராமல் பிரதமர் உலகம் சுற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். இதற்காக அம்மாநில அரசு தண்டிக்கப்பட வேண்டும். முதலமைச்சர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறிய அவர், பாஜகவின் இந்த கொடூர செயலுக்கு மக்கள் தண்டனை அளிப்பார்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க:"என்.எல்.சி யின் அடியாளாக தமிழக அரசு... கூலிப்படையாக உழவர் நலத்துறை அமைச்சர்" அன்புமணி குற்றச்சாட்டு!