நெருங்கி வரும் கோடைக்காலம் - சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த மக்கள்

கோடைக்காலம் நெருங்கி வரும் நிலையில் வெப்பம் தாளாத அதிகரித்து வருவதால், தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களை நோக்கி பொதுமக்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்துள்ளனர்

நெருங்கி வரும் கோடைக்காலம் - சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்த மக்கள்

வாரவிடுமுறை மற்றும் கடும் வெப்பம் காரணமாக கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொடைக்கானலில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேபோல் கோக்கர்ஸ் வாக், பிரையன்ட் பூங்கா,  ரோஜா பூங்கா, கொடைக்கானல் ஏரி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்ற  சுற்றுலா பயணிகள்  படகுகளில் சென்றும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதேபோல் நீலகிரி மாவட்டம் உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் முக்கிய இடங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ஏரியில் படகு பயணம் சென்றும் இதமான சூழலை அனுபவித்தனர். 

ஞாயிறு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். விடுமுறையை அனுபவிக்கவும், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், கோவை மாவட்டம் குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குளித்து மகிழ்ந்தனர்.