” மேல்முறையீடு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் ” - ஓபிஎஸ்.

” மேல்முறையீடு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் ” - ஓபிஎஸ்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்வது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், 

தொண்டர்களாக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்கள் கருத்தறிந்து முடிவு அறிவிக்கப்படும். மேல்முறையீடு குறித்து தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.

கொடநாடு கொலை வழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும். வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து அனைவருக்கும் தெரியும். வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. முடிவு மக்களுக்கு தெரியும். 
ஓட்டுநர் கனகராஜ் குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததைக் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் மதுரை மாநாடு முடிந்து போன புளியோதரை என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து  சென்றார்.

இதையும்  படிக்க   | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கு...உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!