லாக் அப் மரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவர் இ.பி.எஸ் இடையே காரசார விவாதம்!

அதிமுக ஆட்சியில் எந்த லாக் அப் மரணமாவது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

லாக் அப் மரணம் -  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவர் இ.பி.எஸ் இடையே காரசார விவாதம்!

லாக் அப் மரணம் தொடர்பாக  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில், காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, லாக் அப் மரணங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும், விக்னேஷ் மரண வழக்கை சி.பி.ஐ. க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய  முதலமைச்சர், விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதோடு, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்,விக்னேஷ், தங்கமணி மரணங்களில் அரசு எதையும் மறைக்கவில்லை எனவும் கூறினார்..

மேலும்,சாத்தான்குளம் தந்தை - மகன் மரண வழக்கில் அதிமுக ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?என கேள்வி எழுப்பிய மு. கஸ்டாலின், விக்னேஷ், தங்கமணி வழக்குகளில் குற்றவாளிகளை அரசு காப்பாற்றாது எனவும் உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய எதிர்கட்சித்தலைவர், லாக்கப் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்பதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பினார்..

அதிமுக ஆட்சியில் எந்த லாக் அப் மரணமாவது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டதா? என முதலமைச்சர் எதிர் வினையாற்றினார் விக்னேஷ், தங்கமணி மரணம் விசாரணை நேர்மையாக நடைபெற்று வருகிறது என்றும்,விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என கூறியதால் விவாதம் முடிவிற்கு வந்தது