நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் இந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் சட்டப்பேரவையில்  அறிவிப்பு

நடப்பு நிதியாண்டில் நிலப் உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும் எனவும்,

நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலடமைந்த ஏழாயிரத்து ஐநூறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் 1,200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்படும் எனவும்,

சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 40 ஆயிரம்  அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.