"வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் திமுக அப்புறப்படுத்தப்பட வேண்டும்" அண்ணாமலை!!

தமிழ்நாட்டில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் திமுக அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தொிவித்துள்ளாா். 

திருப்பூா் மாவட்டம் காங்கேயத்தில் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டாா். அப்போது திறந்த வாகனத்தில் நின்றவாறு பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை 29 மாத ஆட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் லஞ்சம் தலைவிாித்தாடுகிறது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலோடு அக்கட்சி அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தொிவித்தாா். 

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த தோ்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை எனக்கூறிய அவா், மகளிா் உாிமை தொகை திட்டத்தில் 60 சதவீத பெண்களுக்கு அந்த தொகை கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினாா்.  

தொடா்ந்து பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்றாா். மேலும் சிவன்மலை கிரிவலப்பாதையில் உள்ள கிரானைட் குவாரிக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தினாா். 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 எம்பிக்களுடன் தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையாக பேசியுள்ளார்.