"அரசியல் நாடகங்களை திமுக அரங்கேற்றுகிறது" திமுக குறித்து அண்ணாமலை விமர்சனம்!!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமை மாநாடு, சனாதனம் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் திமுகவின் தில்லு முல்லு வேலைகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் கட்ட என் மண் என் மக்கள் யாத்திரையை மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியிலிருந்து  தொடங்கி வைத்தனர். 

சேயூர் சாலையில் துவங்கிய இந்த பாதயாத்திரை கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி ஆகியவற்றின் வழியாக சுமார் நான்கு கிலோமீட்டர் உள்ள அவிநாசி புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாமலை, திமுக மகளிர் உரிமை மாநாடு, சனாதனம் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் திமுகவின் தில்லு முல்லு வேலைகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறினார். 

இதனை தொடர்ந்து மாலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்கினார். மேட்டுப்பாளையம் கோவை ரோடு மெட்ரோ பள்ளி அருகே இருந்து தொடங்கிய இந்த யாத்திரை பேருந்து நிலையம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். வழி நெடுங்கிலும் ஏராளமான பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.