பாஜகவின் சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு செல்வதே நமக்கு முதல் வெற்றி-அண்ணாமலை

பாஜகவின் சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு செல்வதே நமக்கு முதல் வெற்றி-அண்ணாமலை

பாஜகவின் சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு செல்வதே முதல் வெற்றி என்று  அக்கட்சியின் தமிழ் மாநில  தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை  நகர்மன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களையும் சென்று  சந்தித்து  வெற்றியை வசமாக்க வேண்டும் என்றார்.

பாஜக சின்னத்தையும்,  சித்தாந்தத்தையும்  மக்களிடம் கொண்டு செல்வதே நமக்கு முதல் வெற்றி தான் என்று அண்ணாமலை கூறினார்.