வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை...!!

வாட்ச் பில்லை வெளியிட்ட அண்ணாமலை...!!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கடிகாரத்திற்கான ரசீதை இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.

திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியிருந்த அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது கையில் இருந்த கடிகாரத்தை பற்றி கூறுகையில், அந்த கடிகாரம் ரஃபேல் நிறுவனம் பெல் அண்ட் ரோஸ் நிறுவனத்துடன் இனைந்து தயாரித்துள்ளதாகவும், பிரான்சில் உள்ள இந்த ரஃபேல் நிறுவனம்தான் ரஃபேல் போர் விமானத்தை தயாரித்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவில் 2 கடிகாரங்கள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றை கோவையை சேர்ந்த சேரலாதன் இராமகிருஷ்ணன் என்பவர் வாங்கியதாகவும் அவரிடம் இருந்து அண்ணாமலை அதை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ரசீதையும் செய்தியாளர்கள் முன்னிலையில் காண்பித்தார்.  

முன்னதாக, மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் "நான் கட்டி இருக்கும் கடிகாரமானது ரபேல் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் அதன் உதிரி பாகங்களால் உருவாக்கியது. மொத்தமாக 500 கடிகாரங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. அதில் 149வது கடிகாரத்தை நான் கட்டி இருக்கிறேன்" என தெரிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் அதை வாங்கியதற்கான இரசீதையும் அதற்கான வருவாய் ஆதாரங்களையும் பொதுவெளியில் வெளியிடுமாறு பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த  அண்ணாமலை ஏப்ரல் 1ஆம் தேதி அதற்கான ஆதாரத்தை வழங்குவதாக தெரிவித்திருந்தார். பின்னர்  தேதியை ஒத்தி வைத்து ஏப்ரல் 14ஆம் தேதி கடிகாரத்திற்கான ரசீதையும் திகவினரின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவதாக கூறி இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.