3-ம் கட்ட நடைபயனத்தை தொடங்குகிறார் அண்ணாமலை..!

3-ம் கட்ட நடைபயனத்தை தொடங்குகிறார் அண்ணாமலை..!

3-ம் கட்ட என் மண் என் மக்கள்  நடைபயணத்தை பாஜக மாநில தலைவா் அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று தொடங்குகிறார். 

பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் 'என் மண் என் மக்கள்' என்ற நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6-ம் தேதி தொடங்க இருந்தார். ஆனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக அந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட 3-ம் கட்ட நடைபயணத்தை அண்ணாமலை மீண்டும் இன்று திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடங்குகிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழாவில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 3 நாள் நடைபயண நிகழ்ச்சி நடக்கிறது. 19-ம் தேதி பல்லடம் தொகுதியிலும், 20-ம் தேதி திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். அவினாசியில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை 3-ம் கட்ட நடைபயணம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்டகட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க    | மத்திய சிறையில் இஸ்லாமியர்களின் தொழுகைக்கு அனுமதி உண்டு..!