"திமுகவுக்கு சனாதனமும் இந்து தர்மமும் வேண்டாம், அமாவாசை மட்டும் வேண்டுமா?" அண்ணாமலை கேள்வி!!

மகளிா் உாிமைத்தொகை ஒரு நாள் முன்னதாகவே வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு சனாதனமும், இந்து தர்மமும் வேண்டாம் ஆனால் அமாவாசை மட்டும் வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் என் மண் என் மக்கள் நடைபயணத்தை பாஜக மாநில தலைவா் அண்ணாமலை தொடங்கினார். அப்போது திறந்த வேனில் நின்றவாறு பேசுகையில், 30 மாத திமுக ஆட்சியில் மக்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை மக்களே புரிந்து கொண்டுள்ளதாக கூறினார்.

தொடா்ந்து பேசிய அவர், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி மகளிர் உரிமை தொகையை கொடுப்பதாக கூறிவிட்டு, திமுகவினா் ஒரு நாள் முன்னதாக அனைவருக்கும் வழங்கிவிட்டதைக் குறிப்பிட்டார். 

மேலும், செப்டம்பர் 14 அமாவாசை என்பதால் தான் முந்தைய நாளே ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும்,  திமுகவினருக்கு சனாதனமும், இந்து தர்மமும் தேவையில்லை ஆனால், அமாவாசை மட்டும் வேண்டுமா என்றும் விமர்சித்தார். திமுக அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க || சிவசங்கர் பாபா வழக்கு: மாணவி காணொலி மூலம் வாக்குமூலம் அளிக்க உத்தரவு!!