செங்கல்பட்டில் தினசரி ரயில் ரத்து... ஆத்திரமடைந்த பயணிகள் மறியல்...

செங்கல்பட்டில் தினசரி ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டில் தினசரி ரயில் ரத்து... ஆத்திரமடைந்த பயணிகள் மறியல்...

கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில் சேவை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்னைக்கு வேலைக்கு செல்லக்கூடிய பயணிகள், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அலைமோத தொடங்கினர்.

இந்நிலையில், மாலை 6.15 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் தினசரி ரயிலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அதிகாரிகள், பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நாளை முதல் தினசரி ரயில் இயக்கப்படும் என்றும், தற்போது மாற்று நடவடிக்கையாக திருமால்பூர் வரை செல்லக்கூடிய ரயிலை அரக்கோணம் வரை நீட்டித்து பயணிகள் அணைவரையும் அனுப்பி வைத்தனர்.