ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை  

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை   

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா நோய்த்தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஆடி அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளிலும் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்று படுகைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நோய்த்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டு உள்ளது. தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு தொடர்ந்து விசேஷ நாட்களாக வருவதால் கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு ஆடிப்பெருக்கு தினமான நாளை செவ்வாய் பொதுமக்கள் ஆலயங்களில் வழிபடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது.

மேலும் வரும் 8ம் தேதி ஆடி அமாவாசை அன்று குமரி மாவட்ட கடற்கரை மற்றும் ஆற்று பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.