வேலூரில் நடைபெறும் பாஜக சாதனை விளக்க கூட்டத்தில் அமித்ஷா இன்று பங்கேற்பு...!

வேலூரில் நடைபெறும்  பாஜக சாதனை விளக்க கூட்டத்தில் அமித்ஷா இன்று  பங்கேற்பு...!

வேலூர் மாவட்டத்தில் இன்று  நடைபெற இருக்கும் பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,   சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அரசியல் சாராத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் சந்தித்தனர். 

தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் வந்த அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். 

விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய அமித் ஷா காரில், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். செல்லும் வழியில் சாலையோரம் பாஜக தொண்டர்கள் திரண்டு நின்று, அவருக்கு வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். 


அமித்ஷாவை அரசியல் சாராத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் நேரில் சந்தித்தனர். அதில் இயக்குனர் சங்கத்தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், விளையாட்டு வீரர் பாஸ்கரன் என சுமார் 20-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் சந்தித்து பேசினர். 

இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரியில் இன்று நடைபெறும் பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதையும் படிக்க     | `கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை இன்று தொடக்கம்......!