"பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்" அமித்ஷா உறுதி! 

"பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்" அமித்ஷா உறுதி! 

2024ல்  300க்கும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வேலூரில் நடந்த பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றதாகவும், கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழலும் நடைபெறவில்லை எனக் கூறினார். காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள் என சாடிய அவர், காங்கிரஸ் - திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் ஏன் எய்ம்ஸ் கொண்டு வரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், தமிழ் மொழியின் தொன்மைக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி என்றும், உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையை பேசி வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பாஜக ஆட்சியில் 2.47 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், 9 ஆண்டில் தமிழ்நாட்டிற்கு மானியமாக 2.38 லட்சம் கோடி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் நீட் உள்ளிட்ட மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத வழி வகுத்தது பாஜக அரசு என்றும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அமித்ஷா விமர்சனம் செய்தார்.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கம் பகுதியில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன்  நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதனைதொடர்ந்து பேசிய அவர், கடந்த காலங்களில் 2 முறை பிரதமர் பதவியை  தவறவிட்டுள்ளது தமிழ்நாடு என்றும், வருங்காலங்களில் தமிழர் ஒருவரை பிரதமராக்க உறுதியேற்போம் எனவும் அமித்ஷா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!