விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு...

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு 4 ஆயிரத்து 508 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு...

சுமார் 22 லட்சத்து 19 ஆயிரம் மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதாகவும், ஒவ்வொரு பம்பு செட்டுக்கும் சராசரியாக ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாயை அரசே செலுத்துவதாகவும் வேளாண் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக இந்த ஆண்டு 4 ஆயிரத்து 508 கோடி ரூபாய் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மத்திய அரசு தனது பங்களிப்பினை கணிசமாக குறைத்து விட்டதாகக் குறிப்பிட்டார்.

எனினும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக 2 ஆயிரத்து 327 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சென்ற ஆண்டில் சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில், இரண்டாவது தவணையாக ஆயிரத்து 248 கோடி ரூபாய் தொகை, விரைவில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எனவும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.