”நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” - திருமாவளவன்!

”நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” - திருமாவளவன்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த மாநில வாரியாக அனைத்து எதிர் கட்சிகளும் ஒன்றிணைய திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான தொல். திருமாவளவன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று சிதம்பரம் வந்தார். முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த இருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் அந்த எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை.

இதையும் படிக்க : ”சாவர்க்கர் பிறந்தநாள் அன்று திறந்ததாலேயே, அந்த நாளை நாங்கள் கருப்பு நாளாக பார்க்கிறோம்” - திருமாவளவன்!

இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. எதிர்காலத்தில் தென்னிந்திய ஆதரவு இல்லாவிட்டாலும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்கிற அடிப்படையில் தொகுதி வரையறை செய்ய இருக்கிறார்கள் என்றெல்லாம் அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.

இதை ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும். சனாதன சக்திகளின் அரசியலை வீழ்த்த வேண்டும். அதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கு மாநில வாரியாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.