நடைபாதையை பார்களாக மாற்றிய மதுபிரியர்கள்...! கண்டுகொள்ளாத ரோந்து பணி காவலர்கள்..!

நடைபாதையை பார்களாக மாற்றிய மதுபிரியர்கள்...!  கண்டுகொள்ளாத ரோந்து பணி காவலர்கள்..!

தாம்பரம் அருகே  பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு   இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்துள்ளனர். அதன்படி,  தமிழ்நாட்டில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில் செயல்பட்டுவந்த 7 டாஸ்மாக் கடைகளும்  அடங்கும். 
 
இதில் சேலையூர் பாரத் நகர் பகுதியில் டாஸ்மாக கடை மூடப்பட்டதால் அருகில் இந்திரா நகரில் உள்ள டாஸ்மாக கடைக்கு மது பிரியர்கள் படையெடுக்க தொடங்கினர். 

மேலும்,  பார் இயங்காத காரணத்தினால் மது பாட்டில்களை வாங்கி கொண்டு சாலையில் உள்ள நடைபாதையில் மது அருந்தி வருகின்றனர்.  இதனால் நடைபாதையை  பயன்படுத்தும் பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனை கண்டுகொள்ளாமல் சேலையூர் காவல் நிலைய ரோந்து வாகனம் கடந்து செல்வது வேதனை அளிக்கிறது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இவ்வாறிருக்க, ' 4127 ' என்ற எண் கொண்ட டாஸ்மாக கடை மருத்துவமனை மற்றும்  தனியார் பள்ளி பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி,  கல்லூரி  மாணவர்கள்  பெரும் அவதிபட்டு வருகின்றனர். தமிழக அரசு மக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்த  டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க    | பாட்னா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு!!