ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு - ஆடு விற்பனை அமோகம்..! 7 கோடிக்கு விற்பனை....!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு  - ஆடு விற்பனை அமோகம்..! 7 கோடிக்கு விற்பனை....!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக குந்தாரப்பள்ளி வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் ஆடுகளை விற்பதற்காக பல்லாயிரக் கணக்கானோர் வருகை தந்துள்ளனர். மேலும், இன்று ஒருநாள் மட்டும் சுமார் 7 கோடி  ரூபாய்க்கு ஆடுகள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் புகழ்பெற்ற வாரச்சந்தையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடு, மாடு, கோழி, விற்பனை நடைபெற்று வருகிறது. நாளை ரம்ஜான் பண்டிகை என்பதால் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பணை ஆகும்  நிலையில் கால்நடை உரிமையாளர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இந்நிலையில், நாளை இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், மற்றும் கர்நாடகா, ஆந்திரா, ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக அழைத்து வந்துள்ளனர். செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை, என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக அழைத்து வரப்பட்டுள்ளது. 

காலை 5 மணிக்கு துவங்கிய வார சந்தையில்  தற்போது விற்பனை மும்முரமாக களைகட்டி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான  கர்நாடகா, பெங்களூர், ஆந்திரா, போன்ற பகுதியில் இருந்தும்  ஆயிரக்கணக்கான வியாபாரிகள், பொதுமக்கள், ஆடுகளை வாங்க குவிந்தா வண்ணம் உள்ளனர். 

சராசரியாக தற்போது ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும், வியாபாரிகளும், போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ளது எனவும் கூறுகின்றனர். வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் குவிந்துள்ளனர்.

இதையும் படிக்க   } கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத்தலம் 7 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்..! - நகராட்சி நிர்வாகம் தகவல்.

இன்று ஒருநாள் மட்டும் சுமார் ஆறு ஆயிரம் முதல் எட்டாயிரம் வரையில் ஆடுகள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் மூலம் சராசரியாக ரூபாய் 7 கோடி விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க   } மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு.. செங்கல்பட்டில் மினி மாரத்தான் போட்டி.