அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் பற்றி விழிப்புணர்வு இருக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். 

அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் - ஆளுநர் ஆர்.என்.ரவி!

தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 2 நாள் பயணமாக வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வ.உ.சி. 150-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். அதில் பேசிய அவர், முழு வெளிப்படைத் தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ள அக்னிபாத் திட்டம் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாகும் என்று பேசினார். இந்தத் திட்டத்தில் நான்கு ஆண்டு பல்வேறு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தவர், அதன் மூலம் இளைஞர்களிடம் தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் ஆகியவை  உருவாகும் என்று பேசினார். 

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுய தொழில் தொடங்கும் வகையில் பொருளாதார ரீதியாக இளைஞர்கள் உயர்வார்கள் என்றும் பேசிய அவர், இந்தத் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு நாட்டின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் பலர் ஈடுபடுவது வருத்தமளிப்பதாக கூறினார். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் இந்தத் திட்டம், 2047 ஆம் ஆண்டில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்றும், அக்னிபாத் திட்டம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம் என்றும் தெரிவித்தார்.