கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பு வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதமே பல மாவட்டங்களில்100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. நாளுக்கு நாள் வெயில் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் தொடங்குகிறது.

வரும் 28ம் தேதி வரை நீடிக்கும் இந்த கத்திரி வெயிலால், வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் வழக்கத்தைவிட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதுடன், இரவு நேரத்தில் புழுக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.